ADDED : ஜூலை 28, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மொழி இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பாற்றும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சாகித்ய அகாடெமி அமைப்பு யுவ புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2025 ஆண்டில் தமிழ் இலக்கிய சிறந்த பங்களிப்பாக 'கூத்தொன்று கூடிற்று'புத்தகம் தேர்வு செய்யப்பட்டது. அதன் நூல் ஆசிரியர் லட்சுமிஹர்க்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விருதுபெற்ற எழுத்தாளர் லட்சுமிஹர்க்கான பாராட்டு விழா, திண்டுக்கல் மாநகர் கிளை தமிழ்நாடு கலை இலக்கியபெருமன்றம், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் நடத்தினர். இதில் நுாலக வாசகர் வட்டத்தினர், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், புரவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.