ADDED : ஜன 27, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நாடார் உறவின்முறை எஸ்.எம்.பி., மாணிக்கம் நாடார் பாக்கியத்தம்மாள் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சி.பி.எஸ்.இ., மழலையர் வகுப்பு மாணவர்களால் மஞ்சள் வண்ண விழா கொண்டாடப்பட்டது.
மாணவர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து வந்து பள்ளியை வலம் வந்தனர்.
மஞ்சள் நிறங்களில் உள்ள பொருட்களைத் தங்கள் இல்லங்களில் இருந்து கொண்டு வந்து, அதைப் பற்றிய செய்திகளைகூறினர். வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.
முகமூடிகளை அவர்களே தயாரித்து வண்ணம் தீட்டி அணிந்தனர். சூரியக் குடும்பம் பற்றிய செய்திகளை பகிர்ந்து, பாடல்கள் இசைத்தனர்.
பள்ளியின் தாளாளர் ராமதாஸ் குழந்தைகள் அனைவரையும் வாழ்த்தினார்.