/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் இளைஞர் தின விழா
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் இளைஞர் தின விழா
ADDED : மார் 17, 2024 05:56 AM

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக இளைஞர் தினவிழா,வர்த்தகக் கண்காட்சி ,மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
விளையாட்டு போட்டிகள் மார்ச் 4 முதல் மார்ச் 14 வரை நடைபெற்றது. மார்ச் 15,16 ல் இளைஞர் தினவிழா , வர்த்தகக் கண்காட்சி நடந்தது. பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன், கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசுகண்ணன், பல்தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி கலந்து கொண்டனர்.
மாணவர்,பேராசிரியர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றது. வர்த்தகக் கண்காட்சியில் 19க்கு மேற்பட்ட வணிகக் கடைகள் மாணவர்களால் நடத்தப்பட்டன.
பங்கேற்ற மாணவர்கள், பேராசிரியர்களுக்கு சான்றிதழ், பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
விளையாட்டு , கலைப்போட்டிகளில் அதிகப் புள்ளிகள் பெற்று என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மேலாண்மைத்துறை, கலை அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறை, பல்தொழில்நுட்பக் கல்லுாரியில் இயந்திரவியல் துறை முதலிடம் பெற்றது. சுழற்கேடயம்,சான்றிதழ் வழங்கப்பட்டது.

