/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நின்ற லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி
/
நின்ற லாரி மீது வேன் மோதி வாலிபர் பலி
ADDED : ஜூன் 05, 2025 03:11 AM

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வேன் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.
வேனில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம் நெய்தலுார் பகுதியை சேர்ந்த நண்பர்கள் 20க்கு மேற்பட்டோர் கொடைக்கானல் சுற்றுலா செல்ல வேனில் வந்தனர்.
நேற்று காலை வத்தலக்குண்டு பைபாஸ் ரோட்டில் வந்தபோது பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதி ரோட்டில் கவிழ்ந்தது.
வேனில் வந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் பரணி 19 , பலியானார். நவநீதகிருஷ்ணன் 19, சுதர்சன் 19, கிருத்திக் ரோஷன் 18, சபரி 19, தனுஷ் 18, அஜய்ராஜ் 18, உட்ட 14 பேர் காயமடைந்தனர். இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.