தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாலிபர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

 வாலிபர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

 வாலிபர் கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்


ADDED : ஆக 02, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் கொலையான வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்தவர்கள் ராமர் 26, ரகு என்ற ராகவேந்திரன் 23. இருவருக்கும் விவசாய நிலத்தில் குதிரை மேய்ந்த தகராறில் ஓராண்டாக முன் விரோதம் உள்ளது.

இரு நாட்களுக்கு முன் பூம்பாறை பழம்புத்துார் வயல் ரோட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராகவேந்திரன் அரிவாளால் வெட்டியதில் ராமர் பலியானார். தடுக்க முயன்ற ராமரின் உறவினர் பிரசாந்த்க்கும் வெட்டு விழுந்தது.

இதனை கண்டித்து ராமரின் உறவினர்கள் கொடைக்கானல் மன்னவனுார் ரோட்டில் 5 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். கொடைக்கானல் போலீசார் ராகவேந்திரனை கைது செய்தனர்.

இவ்விவகாரத்தில் ராகவேந்திரன் குடும்பத்தினரால் அச்சுறுத்தல் உள்ளதால் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி ராமரின் உறவினர்கள் நேற்று காலை மீண்டும் அதே பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய ஏ.டி.எஸ்.பி., தெய்வம், கொடைக்கானல் டி.எஸ்.பி., காயத்ரி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கலைத்தனர்.

இதற்கிடையில் ராமரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட்டது.

அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு உடலை பெற்றுச்சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us