/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ADDED : ஏப் 02, 2025 01:38 AM
ஈரோடு:காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களான பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் நடப்பாண்டு விழாவை ஒட்டி மூன்று கோவில்களிலும் கடந்த, 22ல் கம்பம் நடப்பட்டது.
இந்நிலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு உரிய பூஜைகளுக்கு பின் குண்டம் பற்ற வைக்கப்பட்டது.
குண்டம் இறங்கும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி, அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்த காத்திருந்தனர். நேற்று அதிகாலை குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பூசாரிகள் முதலில் தீ மிதித்து தொடங்கி வைக்க, அதை தொடர்ந்து கோவிலுக்கு எதிரேயுள்ள காலிங்கராயன் வாய்க்காலில் குளித்துவிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு பெரியார் வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடக்கிறது.
கோவிலில் தொடங்கி பொன்வீதி வரை தேர் இழுத்து வரப்பட்டு நிலை நிறுத்தப்படும். நாளை மீண்டும் இழுக்கப்பட்டு அக்ரஹார வீதியில் நிலை நிறுத்தப்படும். நாளை மறுதினம் அங்கிருந்து இழுக்கப்பட்டு காரை வாய்க்கால் சந்திப்பு வழியாக கோவிலை வந்து நிலை சேரும்.