/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தர்பூசணியில் ரசாயன கலப்பு என வதந்திதோட்டக்கலை துறை சார்பில் விளக்கம்

ADDED : ஏப் 03, 2025 01:49 AM
தர்பூசணியில் ரசாயன கலப்பு என வதந்திதோட்டக்கலை துறை சார்பில் விளக்கம்
ஈரோடு:'தர்பூசணியில், ரசாயனம் கலப்பு என வதந்தி பரப்பப்படுவதை நம்ப வேண்டாம்,' என, ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:ஈரோடு மாவட்டத்தில், 100 ெஹக்டேரில் விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, கொடுமுடி, தாளவாடி யூனியன் பகுதியில் தர்பூசணி அதிகமாக சாகுபடி செய்து விற்பனைக்கு வருகிறது. தர்பூசணி பழங்கள் சிவப்பாக இருக்க, ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்படுவதாக வதந்தி பரவுவதால், விற்பனை குறைவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக கள ஆய்வு செய்து, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் உறுதி செய்து வருகின்றனர். ஆய்வு முடிவில், தர்பூசணி பழங்களில் எவ்வித ரசாயனமும் ஊசி மூலம் செலுத்தப்படவில்லை என, கண்டறிந்துள்ளோம்.
தர்பூசணியில் இயற்கையான லைக்கோபீன் என்ற நிறமி உள்ளது. அதுவே சிவப்பு நிறத்துக்கு காரணம். செயற்கை ஊசி செலுத்தி பழங்களை நிறம் மாற்ற முயன்றால், பழங்கள் அதன் தன்மையை இழந்து, உடனடியாக கெட்டுவிடும். பொதுமக்கள், எவ்வித அச்சம் இன்றி கோடை காலத்தில் சுவையான, குளிர்ச்சியான தர்பூசணி பழங்களை உண்ணலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.