/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரும்பாலை கழிவு கொட்டிய பிரச்னைகசிவு நீர் வரத்தால் நீரோடை இயல்பு
/
இரும்பாலை கழிவு கொட்டிய பிரச்னைகசிவு நீர் வரத்தால் நீரோடை இயல்பு
இரும்பாலை கழிவு கொட்டிய பிரச்னைகசிவு நீர் வரத்தால் நீரோடை இயல்பு
இரும்பாலை கழிவு கொட்டிய பிரச்னைகசிவு நீர் வரத்தால் நீரோடை இயல்பு
ADDED : ஏப் 06, 2025 01:20 AM
இரும்பாலை கழிவு கொட்டிய பிரச்னைகசிவு நீர் வரத்தால் நீரோடை இயல்பு
ஈரோடு:ஈரோடு அருகே நீரோடையில் இரும்பாலை கழிவு கொட்டிய பிரச்னையில், தடுப்பணை, அதை ஒட்டிய பகுதியில் கசிவு நீர் வரத்தால் இயல்பு நிலைக்கு மாறி வருவதாக, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.
ஈரோடு அருகே ஆட்டையாம்பாளையத்தில் கடந்த, 18ம் தேதி இரவில், பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் ஆர்.கே.ஸ்டீல்ஸ் நிறுவனம், இரும்பாலை கழிவை லாரியில் கொண்டு வந்து நீரோடையில் கொட்டியது. அங்கிருந்து, 8 கி.மீ., துாரத்துக்கு நிலத்தடி நீர், குளத்துப்பாளையம் தடுப்பணை நீரும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமாகி டி.டீ.எஸ்., 640 முதல், 800க்கு உயர்ந்தது. ஆசிட் நெடியுடன், கால்நடைகள் கூட நீரை குடிக்க இயலாத நிலை ஏற்பட்டது. சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கீழ்பவானி வாய்க்கால் தற்போது கசிவு நீர் வரத்தாகி, நீரோடை, தடுப்பணையில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு மாறி வருகிறது. கசிவு நீர் வரத்தை சீர் செய்து, சாலை பராமரிப்பு பணி உள்ளிட்ட பணி நடக்கிறது.
இதுபற்றி ஈரோடு சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் கூறியதாவது: தினமும் தடுப்பணை, கழிவு நீர் கொட்டிய இடம், பிற நீர் வரத்துள்ள இடத்தை ஆய்வு செய்து, மாதிரி எடுக்கிறோம். தற்போது, டி.டீ.எஸ்., 340க்குள் வந்துள்ளது. இது இயல்பானதுதான். கீழ்பவானியில் கசிவு நீர் வரத்து அதிகமாக உள்ளதால், ஆலைக்கழிவு
முற்றிலும் நீர்த்து போய்விட்டது. இவ்வாறு கூறினார்.