/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் ஆலோசனை
/
தி.மு.க., சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : ஆக 25, 2024 01:35 AM
தி.மு.க., சுற்றுச்சூழல் அணி
நிர்வாகிகள் ஆலோசனை
காங்கேயம், ஆக. 25-
காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர், குட்டப்பாளையத்தில் அமைந்துள்ள தி.மு.க., சுற்றுசூழல் அணி அலுவலகத்தில், தி.மு.க., சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள்,ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார்.
கோவை, நீலகிரி, ஈரோடு மண்டல மாநிலத் துணைச் செயலாளர் மணிசுந்தர், திருப்பூர், நாமக்கல், கரூர் மண்டல மாநில துணை செயலாளர் நாராயண மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
சுற்றுசூழல் அணி அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து, பல்வேறு நிகழ்வுகளை குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர், துணை பொறுப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

