/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடைமீறிய அரசு பஸ் டிரைவர்போலீசாருடன் வாக்குவாதம்
/
தடைமீறிய அரசு பஸ் டிரைவர்போலீசாருடன் வாக்குவாதம்
ADDED : ஜன 12, 2025 01:25 AM
தடைமீறிய அரசு பஸ் டிரைவர்போலீசாருடன் வாக்குவாதம்
ஈரோடு, : ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு, பெருந்துறை சாலை, ஈ.வி.என். சாலைகளில் இருந்து வரும் டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள் அகில்மேடு வீதி வழியே செல்ல வேண்டும். மேட்டூர் சாலை வழியே பஸ் ஸ்டாண்ட் செல்ல கூடாது என டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் சாலை துவக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, 11:30 மணியளவில் திருப்பூரில் இருந்து வந்த ஒரு அரசு பஸ், மேட்டூர் சாலையில் பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றது. முனிசிபல் காலனி ஜங்ஷன் பகுதியில் நின்றிருந்த வடக்கு போக்குவரத்து போலீசார் பஸ்சை தடுத்து நிறுத்தினர். தடை செய்யப்பட்ட சாலையில் வருவது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது போலீசுக்கும், டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மீண்டும் சாலையில் வரக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போலீசாரும், அரசு பஸ் டிரைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.