/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.வி.எம்.,கள் வைக்கும் 'ஸ்டிராங் ரூம்' ஆய்வு
/
இ.வி.எம்.,கள் வைக்கும் 'ஸ்டிராங் ரூம்' ஆய்வு
ADDED : பிப் 05, 2025 01:21 AM
இ.வி.எம்.,கள் வைக்கும் 'ஸ்டிராங் ரூம்' ஆய்வு
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பொது தேர்தல் பார்வையாளர் அஜய்குமார் குப்தா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கல்லுாரியின் 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்க, ஓட்டுச்சாவடி எண் வாரியாக கட்டம் வரையப்பட்டிருந்தது. அவற்றை ஆய்வு செய்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு, பதிவுகளை உறுதி செய்தனர்.
பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ள அறைகள், ஊடக மையம், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்ட இடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், தபால் ஓட்டு வைப்பறை, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் அமருமிடம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளையும் உறுதி செய்தனர்.
எஸ்.பி., ஜவகர், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உடனிருந்தனர்.