/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பு
/
லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பு
ADDED : பிப் 09, 2025 01:11 AM
லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பு
ஈரோடு: ஈரோடு, இந்திரா நகர், மோசிகீரனார் வீதியை சேர்ந்தவர் வைரவேல், 43; வ.உ.சி., பூங்கா நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கமிஷன் மண்டி வைத்துள்ளார். இவரது கடைக்கு ஆந்திராவில் இருந்து கடந்த, ௫ம் தேதி தக்காளி லோடு வந்தது.
தக்காளியை இறக்கி விட்டு காலி கிரேடுகளை எடுத்து செல்ல காய்கறி மார்க்கெட்டை ஒட்டிய ஏ.பி.டி., சாலையில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் மகேந்திரன், 45, பாஸ்கர், 60, லாரியில் சமைத்து சாப்பிட்டு தங்கி இருந்தனர். அன்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நால்வர் வந்து, துாங்கி கொண்டிருந்த டிரைவர்களை எழுப்பி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
பணம் தர மறுத்ததால் சமைக்க வைத்திருந்த கத்தியை எடுத்து மகேந்திரன் வலது கையில் கீறியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை, கூகுள்-பேதான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் அவரது மொபைல் போனை பறித்து, 18,700 ரூபாயை எடுத்து கொண்டனர்.
பின்னர் மொபைல் போனில் அந்த பரிவர்த்தனையை டெலிட் செய்து விட்டு, மொபைல்போனை அவரிடம் கொடுத்த தப்பியுள்ளனர். டிரைவர்கள் இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
இதுகுறித்து வைரவேலிடம் தெரிவித்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் போலீசில் அவர் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.