/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அபராதம் கட்டாத சி.எஸ்.ஐ.,நிலமீட்பு இயக்கம் கண்டனம்
/
அபராதம் கட்டாத சி.எஸ்.ஐ.,நிலமீட்பு இயக்கம் கண்டனம்
அபராதம் கட்டாத சி.எஸ்.ஐ.,நிலமீட்பு இயக்கம் கண்டனம்
அபராதம் கட்டாத சி.எஸ்.ஐ.,நிலமீட்பு இயக்கம் கண்டனம்
ADDED : மார் 08, 2025 02:42 AM
அபராதம் கட்டாத சி.எஸ்.ஐ.,நிலமீட்பு இயக்கம் கண்டனம்
ஈரோடு:அபராதம் கட்டாத சி.எஸ்.ஐ., நிர்வாகத்துக்கு நிலமீட்பு இயக்கம் கண்டனம் தெரிவித்தது.ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. நில மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
துணை தலைவர்கள் கைலாசபதி, செல்வராஜ் முன்னிலை வகித்தனர். சி.எஸ்.ஐ., நிர்வாகம் ஆக்கிரமித்த, 12.66 ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிலத்தில் இருந்த மரங்களை சி.எஸ்.ஐ., நிர்வாகம் சட்ட விரோதமாக வெட்டியது.
இதற்கு ஆர்.டி.ஓ., விதித்த, 35,787 ரூபாய் அபராத தொகை இதுவரை செலுத்தவில்லை.பணத்தை செலுத்தாவிடில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். 80 அடி திட்ட சாலையை உடனடியாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மார்ச், 31ல், 1,008 பெண்களை திரட்டி ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, மாரியம்மன் கோவில் வரை தீர்த்தக்குட ஊர்வலம் நடக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.