/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பென்சனர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
பென்சனர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 01:42 AM
பென்சனர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
நம்பியூர்:-நம்பியூர் வட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர் கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நம்பியூர் வட்டார தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார பொருளாளர் குருசாமி, துணைத்தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தனர். மாநில பிரதிநிதி சுப்பிரமணியம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண்டும். குறைந்தபட்ச பென்ஷன் தொகை, 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நம்பியூர் வட்டார துணை செயலாளர் சின்னப்பன் நன்றி கூறினார்.
* ஈரோட்டில் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், வட்டார தலைவர் நடராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வேலுசாமி உட்பட பலர் பேசினர்.
இதேபோல் பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.