/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மிரட்டல் புகாரில் கந்து வட்டி ஆசாமி கைது
/
மிரட்டல் புகாரில் கந்து வட்டி ஆசாமி கைது
ADDED : மார் 15, 2025 02:51 AM
மிரட்டல் புகாரில் கந்து வட்டி ஆசாமி கைது
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இல்லியம்புதுாரை சேர்ந்தவர் செல்லத்துரை, 57; சென்ட்ரிங் ஒப்பந்ததாரர். தொழிலை விரிவுபடுத்த காங்கேயம், அழகேகவுண்டன்புதுாரை சேர்ந்த கோவிந்தசாமியிடம், 2019ல், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வட்டி, அசல் என ஏழு வருடங்களில், 60 லட்சம் ரூபாய் செலுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடன் பெறும் போது தான் கொடுத்த காசோலை மற்றும் பத்திரத்தை கேட்டுள்ளார்.
அவற்றை திருப்பி தராததுடன், செல்லத்துரை மற்றும் அவரது மனைவியை ஜாதி பெயரை கூறி கோவிந்தசாமி திட்டி மிரட்டினாராம்.
இதுகுறித்து காங்கேயம் போலீசில், செல்லத்துரை நேற்று முன்தினம் புகாரளித்தார். இதன் அடிப்படையில் கோவிந்தசாமி மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், கந்து வட்டி தடுப்பு சட்டம் உள்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.
அதேசமயம் கோவிந்தசாமி வீட்டில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், 10க்கும் மேற்பட்ட கடன் பத்திரங்கள், ஏழு காசோலை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 695 காய்கள் வரத்தாகின. ஒரு காய் அதிகபட்சம், 43 ரூபாய், குறைந்தபட்சம், 30 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 238 காய்கள் வரத்தாகி, ஒரு காய், 14.30 ரூபாய் முதல், 25.50 ரூபாய் வரை விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ முல்லை பூ, 860 ரூபாய்க்கு ஏலம்போனது. மல்லிகை-575 ரூபாய், காக்கடா-400, செண்டுமல்லி- 69, கோழிகொண்டை-42, சம்பங்கி-120, அரளி-120, துளசி-40, செவ்வந்தி-160 ரூபாய்க்கும் விற்பனையானது.
* தாளவாடிஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 61 மூட்டை வரத்தானது. குவிண்டால் அதிகபட்சம், ௧1,600 ரூபாய், குறைந்தபட்சம், 10,200 ரூபாய்க்கும் ஏலம் போனது. 36.79 குவிண்டால் மஞ்சள், 3.87 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.