/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சியில் உபரி பட்ஜெட் தாக்கல்அசைவ விருந்தை தவிர்த்த அ.தி.மு.க.,வினர்
/
சியில் உபரி பட்ஜெட் தாக்கல்அசைவ விருந்தை தவிர்த்த அ.தி.மு.க.,வினர்
சியில் உபரி பட்ஜெட் தாக்கல்அசைவ விருந்தை தவிர்த்த அ.தி.மு.க.,வினர்
சியில் உபரி பட்ஜெட் தாக்கல்அசைவ விருந்தை தவிர்த்த அ.தி.மு.க.,வினர்
ADDED : மார் 27, 2025 01:38 AM
ஈரோடு மாநகராட்சியில் உபரி பட்ஜெட் தாக்கல்அசைவ விருந்தை தவிர்த்த அ.தி.மு.க.,வினர்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், 5.49 கோடி ரூபாய்க்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஈரோடு மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம், துணை கமிஷனர் தனலட்சுமி, துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய், மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி-ஆரம்ப கல்வி நிதி மொத்த வருவாய் வரவு (மூலதன வரவு, வருவாய் வரவு) ரூ.517.18 கோடி. செலவு ரூ.512.18 கோடியாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் நிதியாண்டில் சொத்து வரி, 71.92 கோடி ரூபாய் கிடைக்கும். இதில் வருவாய் நிதிக்கு, ரூ.31.26 கோடி, குடிநீர் மற்றும் வடிகால் நிதிக்கு ரூ.28.15 கோடி, ஆரம்ப கல்வி நிதிக்கு ரூ.12.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தொழில் வரியாக ரூ.6.78 கோடி கிடைக்கும். பதிவுத்துறை மூலம் சொத்து மாற்றங்களுக்கு உரிய வரி ரூ.7 கோடியும், கேளிக்கை வரியாக ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.8.50 கோடி வருவாய் கிடைக்கும். வணிக வளாகம், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், வாகன நிறுத்தம், சிறு குத்தகையினங்கள் மூலம் ரூ.12.86 கோடி வருவாய் கிடைக்கும். ஒப்பந்ததாரர், பிளம்பர், தொழில் உரிம கட்டணம், குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் மூலம் ரூ.58.29 கோடி வருவாய் கிடைக்கும். வேலை பணிகளுக்கான மானியங்கள் மற்றும் கடன்கள் மூலம் ரூ.260.48 கோடி வரப்பெறும். மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதிய செலவினத்துக்காக ரூ.98.05 கோடியும், ஓய்வூதிய பயன்களுக்காக ரூ.28.74 கோடியும், நிர்வாக செலவினத்துக்காக ரூ.34 லட்சம் செலவாகும்.
வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதிகளில் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் செலவினங்களுக்காக ரூ.89.96 கோடி செலவாகும். கடன்களுக்கு அசல் மற்றும் வட்டி செலவினங்கள் ரூ.10.71 கோடி செலவாகும். வருவாய், குடிநீர் மற்றும் கல்வி நிதியில் மூலதன வேலை பணிக்காக ரூ.269.51 கோடி செலவாகும். உபரி நிதி, ரூ.5.49 கோடி ரூபாய் இருக்கும்.
பட்ஜெட் கூட்டத்தை முன்னிட்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை, குலோப்ஜாமுன், பாயாசம், சாம்பார், ரசம், மோர், பொறியல் என அசைவ, சைவ விருந்து வழங்கப்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டதால் விருந்தில் பங்கேற்கவில்லை. வெளிநடப்பில் ஈடுபட்டாலும் சாப்பிட்டு செல்லுமாறு தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் அழைத்தும் அ.தி.மு.க.,வினர் ஏற்கவில்லை.
அ.தி.மு.க., வெளிநடப்பு
'ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தை, தனியாருக்கு விட்ட ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். தனியாருக்கு ஏலம் விட்டதால் ஏழை மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்த முடியாமல் சிரமப்படுவர். எனவே டெண்டரை ரத்து செய்ய வேண்டும்' என்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு தி.மு.க., கவுன்சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மண்டபத்துக்கு, ௫,௦௦௦ ரூபாய் மட்டுமே வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்யலாம். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மண்டபத்தை சீரமைத்தீர்களா? நிதி ஒதுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' என்று கேள்வி கேட்டு தி.மு.க.,வினர் பேசியதால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
'தண்ணீரே செல்லாத பாதாள
சாக்கடைக்கு வரியா?'
மாநகராட்சி கூட்டத்தில் மண்டல தலைவர் பழனிச்சாமி பேசியதாவது (தி.மு.க.,): தெரு விளக்குகள், 10 நாட்களாக பராமரிப்பில் இல்லை. பணியாளர்களிடம் கேட்டால் ஸ்டிரைக்கில் இருப்பதாக கூறுகின்றனர். குடிநீர் வினியோகத்துக்காக ஐந்தாண்டுக்கு முன் போடப்பட்ட நீல நிற குழாய் வீணாகி வருகிறது. இதில் குடிநீர் வருவது இல்லை. பாதாள சாக்கடைக்கு வரி வாங்கப்பட்டது. தற்போது பராமரிப்புக்கு தனியாக வரி வசூலிக்கப்படுகிறது. தண்ணீரே செல்லாத பாதாள சாக்கடைக்கும் வரி வாங்கப்படுகிறது.
'தகவல் தெரிவிப்பதில்லை'மண்டல தலைவர் தண்டபாணி (தி.மு.க.,): இளநிலை பொறியாளர்கள் வார்டு பகுதியில் நடக்கும் வேலை குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. மாறாக மக்கள்தான் பிரச்னையை கூறுவதற்காக வீட்டுக்கு வந்து எழுப்புகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் செய்யும் வேலைகளை, கவுன்சிலர்களுக்கு கூறுவது கிடையாது. கவுன்சிலர்கள் கூறும் வேலைகளை செய்வதும் இல்லை. கணினி மயமாக்கியதில் வரி தவறுதலாக போடப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.