/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜாப் ஒர்க் கட்டணம் இழுத்தடிப்புசாய ஆலைகள் சங்கத்தினர் வேதனை
/
ஜாப் ஒர்க் கட்டணம் இழுத்தடிப்புசாய ஆலைகள் சங்கத்தினர் வேதனை
ஜாப் ஒர்க் கட்டணம் இழுத்தடிப்புசாய ஆலைகள் சங்கத்தினர் வேதனை
ஜாப் ஒர்க் கட்டணம் இழுத்தடிப்புசாய ஆலைகள் சங்கத்தினர் வேதனை
ADDED : மார் 28, 2025 01:00 AM
ஜாப் ஒர்க் கட்டணம் இழுத்தடிப்புசாய ஆலைகள் சங்கத்தினர் வேதனை
திருப்பூர்:பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான கட்டணங்களை வழங்க இழுத்தடித்தால், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உரிய ஜாப் ஒர்க் கட்டணங்கள் குறிப்பிட்ட கால வரம்புக்குள் கிடைக்கவேண்டும் என்பதற்காக, மத்திய நிதி அமைச்சகம் கடந்த 2024 ஏப்.1 ல், புதிய விதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி, குறு, சிறு, நடுத்தர நிலையிலான நிறுவனங்களுக்கு சேரவேண்டிய உற்பத்தி கட்டணங்களை, அதிகபட்சம் 45 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்கிற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு உற்பத்தியாளர்களும், ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கான கட்டணங்களை 45 நாட்களுக்குள் வழங்குவதில்லை. கட்டணங்களை வழங்க காலதாமதம் செய்வதால், ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன; கடுமையான நிதிச்சுமையை எதிர்கொள்ள நேரிடுகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் பிரிவுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால்தான், ஒட்டுமொத்த பின்னலாடை துறையை வளர்ச்சி பெறச்செய்ய முடியும். ஏற்றுமதி, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள், அரசு விதிமுறைகளை பின்பற்றி, குறிப்பிட்ட காலத்துக்குள் ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு உரிய கட்டணங்களை வழங்கவேண்டும். இல்லாவிடில், அனைத்து ஜாப்ஒர்க் நிறுவனங்களும் இணைந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.