/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கர்ப்பிணி, முதியோருக்கு ஓட்டுப்பதிவில் முன்னுரிமை
/
கர்ப்பிணி, முதியோருக்கு ஓட்டுப்பதிவில் முன்னுரிமை
ADDED : ஏப் 19, 2024 06:33 AM
ஈரோடு : இன்று நடக்கும் ஓட்டுப்பதிவில், கர்ப்பிணி, முதியோர், கைக்குழந்தையுடன் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இதுபற்றி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:இன்று காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் துறை, வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும். பொது விடுமுறை வழங்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடியிலும் தேவையான வசதி, பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், கை குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி, முன்னுரிமை வழங்கி ஓட்டுப்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

