/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி
/
ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி
ADDED : பிப் 27, 2025 02:14 AM
ஓடும் ரயிலில் இருந்துவிழுந்த மூதாட்டி பலி
ஈரோடு:கோவை, பெரியகடை வீதியை சேர்ந்தவர் மேரி நிர்மலா, 67. தென் ஆப்ரிக்காவில், 22 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றினார். கடந்த மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள செயின்ட் சார்லஸ் இன்ஸ்டிடியூட்டில் நர்சாக வேலை செய்தார். கடந்த, 24ல் நாக்பூரில் இருந்து, கோவைக்கு கேரளா விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டியில், தன் தோழி பிரான்சிஸ் மேரியுடன் பயணித்தார். கடந்த, 25 மதியம் 12:10 மணிக்கு மாவெலிபாளையம் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது பாத்ரூம் செல்ல மேரி நிர்மலா எழுந்து சென்றார். திடீரென தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேரி நிர்மலாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

