/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவனை கொன்ற மனைவிவிஷம் குடித்து தற்கொலை
/
கணவனை கொன்ற மனைவிவிஷம் குடித்து தற்கொலை
ADDED : மார் 08, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவனை கொன்ற மனைவிவிஷம் குடித்து தற்கொலை
தாராபுரம், மார்ச் ௮தாராபுரத்தை அடுத்த நஞ்சியம்பாளையத்தை சேர்ந்த பாலு மனைவி ஈஸ்வரி, 60; கடந்த, 2023 ஜூலை, 29ல், குடிபோதையில் பிரச்னை செய்த கணவனை, கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டார். பெயிலில் வந்த நிலையில், தாராபுரத்தை அடுத்த உண்டாரபட்டியில் மகள் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு விஷ மாத்திரை தின்று விட்டார். உயிருக்கு போராடிய நிலையில், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நள்ளிரவில் இறந்தார். இதுகுறித்து அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.