/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்., முன்னாள் தலைவர் மீது௩ பிரிவுகளில் வழக்குப்பதிவு
/
பஞ்., முன்னாள் தலைவர் மீது௩ பிரிவுகளில் வழக்குப்பதிவு
பஞ்., முன்னாள் தலைவர் மீது௩ பிரிவுகளில் வழக்குப்பதிவு
பஞ்., முன்னாள் தலைவர் மீது௩ பிரிவுகளில் வழக்குப்பதிவு
ADDED : ஏப் 05, 2025 01:51 AM
பஞ்., முன்னாள் தலைவர் மீது௩ பிரிவுகளில் வழக்குப்பதிவு
பவானி:பவானி அருகே சன்னியாசி பட்டியில் கடந்த மாதம், 29ம் தேதி கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பஞ்., முன்னாள் தலைவர் சித்திரசேனன் கலந்து கொண்டார்.
பஞ்., செயலாளர் ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது மொபைல்போனை பறித்து ஆற்றில் வீசி, பதிவேடுகளை பறித்து கொண்டதாக புகார் எழுந்தது. பவானி போலீசில் ஜெகநாதன் புகாரளித்தும் நடவடிக்கை
இல்லாததால், பவானி யூனியன் செயலாளர், ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில் பவானி போலீசார், சித்திரசேனன் மீது, வன்கொடுமை தடுப்புச்சட்டம், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியர்களை தகாத வார்த்தை பேசியது என மூன்று பிரிவுகளில் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
இதையறிந்த சித்திரசேனன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.