/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவில் அருகே நாய் கடித்து ஆடுகள் பலி
/
வெள்ளகோவில் அருகே நாய் கடித்து ஆடுகள் பலி
ADDED : நவ 26, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: வெள்ளகோவில், பச்சாபாளையம் கிராமம் தண்ணீர்பந்தல்வ-லசை சேர்ந்த விவசாயி சங்கீதா மகேஸ்வரன், 35; பெரியகாட்டு-தோட்டத்தில் உள்ள பட்டி அமைத்து, 60க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பட்டியில் ஆடு-களை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்ற-போது, இரண்டு ஆடுகள் இறந்து கிடந்தன. இரு ஆடுகள் உயி-ருக்கு போராடியபடி கிடந்தன. அதற்கு சிகிச்சை அளித்தும் பல-னின்றி இறந்தன.இவற்றின் மதிப்பு, ௬௦ ஆயிரம் ரூபாய். தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் பலியானது தெரிய வந்தது. இறந்த ஆடுகளுக்கு நிவா-ரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.