ADDED : ஜன 18, 2025 01:34 AM
கூலி குறைவு-விரைவான வேலையால்
நெல் நடவு பணியில் அதிகரிக்கும் வட மாநிலத்தவர்டி.என்.பாளையம், : கொடிவேரி அணைக்கட்டில் இருந்து, அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்
பட்டுள்ளது. இதனால் இரண்டாம் போக நெல் நடவுப்பணி தீவிரம் அடைந்துள்ளது. ஒரு வாரமாக டி.என்.பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில், நெல் நடவு மும்முரமாக நடக்கிறது. இதில் மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது;நெல் நடவு பணிக்கு உள்ளூர் ஆள் பற்றாக்குறையால், வட மாநில தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறோம். ஒரு ஏக்கர் நெல் நடவு கூலியாக, உள்ளூர் தொழிலாளர்கள், 6,000 ரூபாய் முதல் 6,500 ரூபாய் பெற்றனர். வட மாநில தொழிலாளர்களோ, 5,500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரையே பெறுகின்றனர். இதனால் ஒரு ஏக்கருக்கு, 500 ரூபாய் மீதியா
வதுடன், நடவுப்பணியும் விரைவில் முடிகிறது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.