/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா
/
செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா
செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா
செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா
ADDED : பிப் 27, 2025 02:18 AM
செம்புளிச்சாம்பாளையத்தில்முனியப்பன் கோவில் பொங்கல் விழா
அந்தியூர்:அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில், முனியப்பன் சுவாமி கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த முதல் வனபூஜையின் போது, முனியப்பன், பெருமாள் மற்றும் காமாட்சியம்மன் தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்தபடி கோவில் வனத்தை நோக்கி வந்தனர்.
அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு பண்டிகை கடந்த, 13ல், பூச்சாட்டுதலுடன் துவங்கி, நேற்று முதல் வன பூஜை நடந்தது. இதில் முனியப்பன், பெருமாள், காமாட்சியம்மன் ஆகிய மூன்று சுவாமிகளின் தேர்களை, மடப்பள்ளியில் இருந்து, இப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக வனத்திற்கு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.அந்தியூர், செம்புளிச்சாம்பாளையம், தாண்டாம்பாளையம், ஒட்டபாளையம், காட்டுப்பாளையம், மேற்கு
காடு, கிழக்கு காடு, பருவாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இன்று வனத்தில் இருந்து, மூன்று சிறிய ரக தேர்களும், மடப்பள்ளி சென்றடையும். மார்ச் 5ல், 60 அடி மகமேரு தேரில், முனியப்பன், சிறிய ரக தேரில், பெருமாள், சிறிய சப்பாரத்தில் காமாட்சியம்மன் ஆகியவை கோவில் வனத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அப்போது பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபடுவர். 6ல், தேர்கள் கோவில் மடத்தை நோக்கி வந்தடையும்.

