ADDED : ஏப் 12, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடி தாக்கி௨ பசுமாடு பலி
பவானி,அம்மாபேட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை, 4:30 மணியளவில், பலத்த காற்று மற்றும் இடியுடன் லேசான மழை பெய்தது. நத்தமேடு, மணக்காட்டு தோட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர், ஐந்து நாட்டு பசு மாடு வளர்த்து வருகிறார். மழை பெய்ததால் மாடுகளை கட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது தொழுவத்தில் இடி தாக்கியதில் இரு பசுமாடுகள் பலியாகி விட்டன. இறந்த இரு மாடுகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என்று வேதனை தெரிவித்தார்.

