/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் விதிமீறல் குறித்து5 வழக்குகள் பதிவு
/
தேர்தல் விதிமீறல் குறித்து5 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 18, 2025 01:31 AM
தேர்தல் விதிமீறல் குறித்து5 வழக்குகள் பதிவு
ஈரோடு,: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ், நிருபர்களிடம் நேற்றிரவு கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில், 65 மனு தாக்கலாகி உள்ளது.
இதில், 40 பேர் சுயேட்சைகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில், 4 மனு தாக்கலானது. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த, 14 பேர் மனு செய்துள்ளனர். நேற்று வரை பறக்கும் படை சோதனையில் ஒன்பது பேரிடம், 12 லட்சத்து, 72,860 லட்சம் ரூபாய் பறிமுதலாகி, 3.30 லட்சம் ரூபாய் திரும்ப வழங்கி உள்ளோம்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக, சி-விஜில் ஆப்பில், 3 புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஐந்து புகாரின்படி ஐந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது, கணக்கு, போலீஸ் பார்வையாளர்கள் பணியை துவங்கி உள்ளனர்.
இன்று வேட்பு மனு பரிசீலனை துவங்கி நடக்கும். 20ல் வேட்பு மனு வாபஸ் பெறுதலும், இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும். ஒரே சின்னத்தை பல வேட்பாளர்கள் கேட்டால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, முதலில் தாக்கல் செய்யப்பட்ட மனு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.