/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் ஸ்டேஷனில் பூஜை இன்ஸ்பெக்டருக்கு 'மெமோ'
/
போலீஸ் ஸ்டேஷனில் பூஜை இன்ஸ்பெக்டருக்கு 'மெமோ'
ADDED : செப் 02, 2024 02:49 AM
வெள்ளகோவில்: காங்கேயம் சப் டிவிஷனில் உள்ள வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டராக ஞானப்பிரகாசம் உள்ளார். கடந்த மாதம், ௨6ம் தேதி அதிகாலை இன்ஸ்பெக்டர் ஏற்பாட்டில், ஸ்டேஷனில் ரகசிய பூஜை நடந்தது.
இதுகுறித்த தகவல் பரவி, பல்வேறு சந்தேகங்களை கிளப்பி, சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பூஜை நடத்திய இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை கோரி, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், ம.தி.மு.க., -
காங்., - கம்யூ., கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி, தற்சார்பு விவசாயிகள் சங்கம் என பல்வேறு அமைப்பினர், காங்கேயம் டி.எஸ்.பி., மாயவனிடம் புகாரளித்னர். இதையடுத்து திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா, விளக்கம் அளிக்க கோரி, ஞானபிரகாசத்துக்கு மெமோ அளித்துள்ளார். இதனால் பூஜைக்கு உடந்தையாக இருந்த வெள்ளகோவில் போலீசார், உரிய தகவல் தெரிவிக்காத
தனிபிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.