/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தன்னார்வலர்களுக்கு கோபியில் பயிற்சி
/
தன்னார்வலர்களுக்கு கோபியில் பயிற்சி
ADDED : ஆக 01, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், கோபி வட்டார வளமையம் சார்பில், கோபியில் நேற்று பயிற்சி நடந்தது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி பயிற்சியை துவக்கி வைத்தார். கருத்தாளர் கணேசன் பயிற்சி அளித்தார். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம், அதன் செயல்பாடு மற்றும் அதன் சிறப்பம்சம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.