ADDED : ஜன 18, 2025 01:31 AM
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா
பெருந்துறை, : எம்.ஜி.ஆரின், 108வது பிறந்த நாள் விழா, பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ., ஜெயகுமார் கலந்து கொண்டார். எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் போட்டோவுக்கு மரியாதை செய்தனர்.
தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக எம்ஜிஆர் போட்டோவுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். குன்னத்துார் நால்ரோட்டில் எம்.ஜி.ஆர்., போட்டோவுக்கு மலர் துாவி மரியாதை செய்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியன், துரைசாமி, கமலகண்ணன், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.---------