/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் பகுதியில்நிலாச்சோறு விழா
/
காங்கேயம் பகுதியில்நிலாச்சோறு விழா
ADDED : பிப் 12, 2025 01:07 AM
காங்கேயம் பகுதியில்நிலாச்சோறு விழா
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலையில், தைப்பூச தேர்த்திருவிழா தொடங்கியதை அடுத்து சுற்று வட்டார கிராமங்களில் நிலாச்சோறு படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
பாரம்பரியமாக நடக்கும் இந்நிகழ்வில் காங்கேயம், பொதிகை நகர் மற்றும் குட்டறை பகுதியில் பெண்கள் ஒன்று கூடி மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதை தொடர்ந்து நிலவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று ஆடிப்பாடி கும்மியடித்தனர். இந்நிகழ்வில் இரவில் நிலவுக்கு உணவு படைத்து, கும்மியடித்து, பாட்டுப்பாடி பங்கிட்டு பெண்கள் உள்ளிட்டோர் உண்டனர். குழந்தைகளிடம் அன்பு, சகோதரத்துவம் வளர, பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டு வர, ஆண்டு தோறும் நிலாச்சோறு நிகழ்வு நடந்து வருவதாக தெரிவித்தனர்.

