ADDED : மார் 22, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளி மாணவியர் இருவர் மாயம்
குமாரபாளையம்:குமாரபாளையம், குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சுசி, 15, பிரியா, 14; இவர்கள் இருவரும், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்றனர். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் குமாரபாளையம் போலீசில் புகாரளித்தனர். அதன்படி, காணாமல் போன மாணவியர் இருவரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.