ADDED : மார் 25, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுடுகாடு கேட்டு மக்கள் மனு
ஈரோடு:சென்னிமலை யூனியன் முருங்கந்தொழுவு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது: முருங்கத்தொழுவு ஆதிதிராவிடர் காலனியில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை, பளையபாளையத்தில் இருந்து தலவுமலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அடக்கம் செய்து வந்தோம். தற்போது அந்த இடத்தில் அருகே பட்டா நிலத்தின் உரிமையாளர்கள், அவ்விடம் செல்ல முடியாமல் தடுப்பு சுவர் அமைத்துவிட்டனர். இனி வரும் நாட்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இயலாது. எங்களுக்கு மாற்றிடம் தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.