ADDED : மார் 30, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
ஈரோடு:சென்னிமலை தட்டங்காடு பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., மேனகா ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு வீட்டிற்கு பின்புறம், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின்படி, சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, சென்னிமலை தட்டங்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.