ADDED : ஜூலை 18, 2026 06:26 AM
ஈரோடு:தமிழ்நாடு
தோட்டக்கலைத்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் சங்க மாவட்ட செயலர் நர்மதா தலைமை
வகித்தார். மாவட்ட தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். வேளாண் உதவி
அலுவலர்கள் சங்கம் மாதேஸ்வரன் வரவேற்றார்.
ளேவாண்மை - உழவர்
நலத்துறையில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0' உருவாக்கி
உள்ளனர். இத்திட்டம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
என்பதால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை,
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வேளாண் பொறியியல் துறை என, நான்கு
துறைகளை ஒருங்கிணைத்து, ஒரு களப்பணியாளர் மேற்கொள்ளும் வகையில்
திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
வேளாண், தோட்டக்கலை துறையினர்
வெவ்வேறு கல்வி தகுதி, தொழில் நுட்பம் பயின்றோர். அவர்களுக்கு பிற
பயிர்கள், உரங்கள், பரிசோதனை, தொழில் நுட்பம் அறிவதில் குழப்பம்
ஏற்படும். இதன் மூலம் துறையும், விவசாயிகளும் பாதிப்பார்கள் என்பதை
கருத்தில் கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர்.
