/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது
/
சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது
சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது
சென்னிமலையில் தம்பதி உள்பட 3 பேர் கொலையில் 2 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2024 08:56 AM
சென்னிமலை : சென்னிமலையை அடுத்த ஒட்டன்குட்டை, கரி-யாங்காட்டு தோட்டத்தில் வசித்த தம்பதியர் முத்துசாமி, 85, சாமியாத்தாள், 74; இருவரும் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டனர். பீரோவில் இருந்த தங்க நகை, பணம் கொள்ளை போனது.
இதேபோல், 2022ல் சென்னிமலையை அடுத்த உப்பிலிபாளையம், குட்டையகாட்டு தோட்-டத்தில் விவசாயி துரைசாமி கவுண்டர் கொலை செய்யப்பட்டார். இங்கும் நகை கொள்ளை போனது. இரு சம்பவங்களிலும், கொலையாளி-களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இரு வழக்குகளிலும் தொடர்புடைய இருவரை, சென்னிமலை போலீசார் கைது செய்யதுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் எருமாட்டை சேர்ந்தவர் கண்ணன், 25; தஞ்சாவூர் மாவட்டம் மனோஜ் பட்டி, பொதிகை நகரை சேர்ந்தவர் இளையராஜன், 28; இருவரும், மூன்று பேர் கொலை வழக்கில் கைது செய்யப்-பட்டனர். அவர்களிடம் இருந்து ஆறு பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இன்னும் சிலருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்-ளனர். ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு இருவரும், ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்-கப்பட்டுள்ளனர். இருவரையும் சென்னிமலை அழைத்து விசாரணை நடந்தது. இந்த கொலை வழக்குகளில் இருவரும் கைது செய்யப்பட்டு, பவானி கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜர் செய்து, மீண்டும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.