/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புகையிலை பொருட்கள்விற்பனை: 4 பேர் கைது
/
புகையிலை பொருட்கள்விற்பனை: 4 பேர் கைது
ADDED : பிப் 20, 2025 01:49 AM
புகையிலை பொருட்கள்விற்பனை: 4 பேர் கைது
ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ஹான்ஸ், 15, கூல் லீப், 5 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த காமராஜர் வீதியை சேர்ந்த பாலமுருகன், 45, என்பவர் மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
வீரப்பம்பாளையம் பிரிவு ராஜேஸ்வரி டீக்கடையில், 30 பாக்கெட் கூல் லீப் பிடிபட்டது. கொத்துகாரர் தோட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, 36, மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
பி.பெ.அக்ரஹாரம் முகமதியர் வீதியில், விமல் 30 பாக்கெட் வைத்திருந்த நஞ்சப்பா நகரை சேர்ந்த மீரா ஜிரஸ், 44, மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
ஈரோடு டவுன் மாதவ கிருஷ்ணா வீதி ஆர்.கே. பெட்டி கடையில் ஹான்ஸ், 4 பாக்கெட், விமல், 30 பாக்கெட் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, 63, என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர்.

