/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வார சந்தையில் தீ 6 கறி கடைகள் நாசம்
/
வார சந்தையில் தீ 6 கறி கடைகள் நாசம்
ADDED : ஏப் 06, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வார சந்தையில் தீ 6 கறி கடைகள் நாசம்
பெருந்துறை:பெருந்துறை வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடக்கிறது. சந்தையில், 14 மாட்டு கறிக்கடைகள் உள்ளன. இவை தென்னை ஓலை மற்றும் தகர சீட்டால் வேயப்பட்டு திறந்த வெளி கடைகளாக உள்ளது. நேற்றிரவு, 7:00 மணியளவில் கறிக்கடைகளில் கூரைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் ஆறு கடைகள் ழுழுவதும் எரிந்து விட்டன. மூன்று கடைகளின் கூரை எரிந்தது. இன்று சந்தை நடக்கவுள்ள நிலையில் கறிக்கடைகள் தீ விபத்தில் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

