/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏ.டி.எம்.,ல் தவறவிட்ட ரூ.7,000 ஒப்படைப்பு
/
ஏ.டி.எம்.,ல் தவறவிட்ட ரூ.7,000 ஒப்படைப்பு
ADDED : ஆக 31, 2024 01:50 AM
ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முத்து, 60; இடையன்காட்டுவலசு ஆந்திரா பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.,ல் நேற்று முன்தினம், 7,000 ரூபாயை எடுக்க சென்றார். கார்டை சொருகி 'பின் எண்'ணை பதிவு செய்தும் பணம் வரா-ததால் சென்று விட்டார். அவரை தொடர்ந்து ஈரோட்டை சேர்ந்த பிரபாகரன், பணம் எடுக்க வந்தார். ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்-படுத்த முயன்றபோது, 7,000 ரூபாய் இருப்பதை பார்த்து, அதை எடுத்து கொண்டார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றவர், வரவேற்பறையில் உள்ள குற்றப்பிரிவு போலீஸா-ரிடம், தொகையை கொடுத்து விபரம் கூறினார். விபரம் அறிந்து முத்துவிடம் பணத்தை போலீசார்
ஒப்படைத்தனர். பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த பிரபாகரனை போலீசார் பாராட்டினர்.