/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல் குவாரியில் வெடிக்காத 68 வெடி செயலிழக்க செய்த நிபுணர்கள் குழு
/
கல் குவாரியில் வெடிக்காத 68 வெடி செயலிழக்க செய்த நிபுணர்கள் குழு
கல் குவாரியில் வெடிக்காத 68 வெடி செயலிழக்க செய்த நிபுணர்கள் குழு
கல் குவாரியில் வெடிக்காத 68 வெடி செயலிழக்க செய்த நிபுணர்கள் குழு
ADDED : செப் 07, 2024 08:02 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் வனச்சாலை செல்லும் சாலையில் வனப்பகு-தியை ஒட்டியுள்ள பகுதியில், ஸ்டார் கிரஷர் கல் குவாரி, சட்டவி-ரோதமாக செயல்பட்டது. கடந்த மாதம் குவாரியில் இரவில் பாறைகளை வெடி வைத்து தகர்த்தபோது, இரு தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர்.
இது தொடர்பாக குவாரியை நடத்திய தம்பதி உள்பட ஆறு பேரை, பங்களாப்புதுார் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கல் குவாரியில், 68 இடங்களில் வெடி மருந்து நிரப்பி வைத்து, வெடிக்காமல் விடப்பட்டது போலீஸ் விசார-ணையில் தெரிய வந்தது. இதையடுத்து கோபி கோர்ட்டு உத்தரவு பெற்று, கோவை மாநகர காவல் துறை வெடிகுண்டு செயலிழப்பு குழு நிபுணர்கள், குவாரிக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.
கோபி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர், கோபி தீய-ணைப்பு துறையினர் மற்றும் பங்களாபுதுார் போலீசாரின் உதவி-யுடன், 68 இடங்களில் வெடிக்காமல் இருந்த வெடிமருந்துகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்தனர்.