/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விளையாட்டில் கராத்தேவை சேர்க்க கோரி முறையீடு
/
விளையாட்டில் கராத்தேவை சேர்க்க கோரி முறையீடு
ADDED : ஆக 13, 2024 07:45 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட கராத்தே ஆசிரியர்கள் சக்திவேல் தலைமையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது:
முதல்வர் கோப்பைக்கான, 23 விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் கராத்தே தவிர்க்கப்பட்டுள்ளது. 'ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா' நடத்திய தேசிய போட்டியில், கராத்தே வீராங்கனைகள், 50 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகையை தமிழக அரசிடம் இருந்து பெற்றுள்ளனர். கராத்தே விளையாட்டில் திறமை மிக்க மாணவ, மாணவியர் உள்ளனர். அவர்கள் திறமையை வெளிப்படுத்த முதல்வர் கோப்பை விளையாட்டில் கராத்தேவையும் சேர்க்க வேண்டும். விளையாட்டு அமைச்சர் உதயநிதி, இதில் நேரடி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

