/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5ல் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர்கள் முடிவு
/
5ல் ஆர்ப்பாட்டம்; ஆசிரியர்கள் முடிவு
ADDED : செப் 02, 2024 02:49 AM
ஈரோடு: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாநில செயற்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் அன்பழகன், மாநில பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ற உறுதிமொழி கூறிய தி.மு.க., அரசு, இன்னும் செயல்படுத்தாமல் மவுனம் காப்பது ஏற்று கொள்ள முடியாதது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, 20
ஆண்டு காலமாக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராடி வருகின்றனர். கல்வி அதிகாரிகள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும், ௫ம் தேதி மாலை, மாவட்ட தலைநகரங்களில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த, கூட்டத்தில்
முடிவு செய்தனர்.