/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கும்பல் கைது
/
பெண்ணிடம் நகை பறித்த 4 பேர் கும்பல் கைது
ADDED : செப் 11, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, ரங்கம்பாளையம் ரயில் நகரை சேர்ந்த சுரேஷ் மனைவி கல்யாணி, 38; கடந்த மாதம், 15ம் தேதி இரவு மொபட்டில் சென்-றபோது, பைக்கில் வந்த இருவர், முகவரி கேட்பது போல நடித்து, அவரது கீழே தள்ளி, 7.5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். அவர் புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார், பைக் கொள்ளையரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நகை பறித்த, ஈரோடு, டீசல் செட், பெரிய தோட்டம் ஆசிக்பாஷா, 30; ஈரோடு, மூலப்பாளையம், நாடார் மேடு பாலாஜி, 35; ஈரோடு, குமலன்குட்டை சக்திவேல், 40; ஈரோடு, சென்னிமலை சாலை பெரிய தோட்டம்
அம்ஜத்கான், 28, என நான்கு பேரை கைது செய்தனர். நான்கு பேரும் பழங்குற்ற-வாளிகள் என போலீசார் தெரிவித்தனர்.