ADDED : பிப் 22, 2025 05:20 AM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் முல்லை பூ ஒரு கிலோ, 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-1,155, காக்கடா-200, செண்டுமல்லி-46, கோழிக்கொண்டை-85, ஜாதிமுல்லை-750, கனகாம்பரம்-500, சம்-பங்கி-80, அரளி-120, துளசி-50, செவ்வந்தி-160 ரூபாய்க்கும் விற்-பனையானது.
தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 2,138 காய்கள் வந்தன. ஒரு தேங்காய் அதிகபட்சம், 40 ரூபாய்; குறைந்தபட்சம், 21 ரூபாய்க்கும் ஏலம் போனது. வரத்தான, 10.69 குவிண்டால் தேங்காய், 59,493 ரூபாய்க்கு ஏலம் போனது.சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 53 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ கருப்பு ரகம், 150.09 ரூபாய் முதல், 190.09 ரூபாய், ஒரு கிலோ சிவப்பு ரகம், 110.09 ரூபாய் முதல், 1௫௦ ரூபாய் வரை, 3.9 டன் எள், 5.௫௮ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் கிலோ 54 ரூபாய்க்கு விற்பனையா-னது. வரத்தான, 115 கிலோ தேங்காய், 6,218 ரூபாய்க்கு விற்பனை-யானது. அதேபோல் தேங்காய் பருப்பு ஏலத்தில் ஒரே விலையாக, 143 ரூபாய்க்கு விற்றது.அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 45 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 141.59 ரூபாய் முதல், 145.45 ரூபாய், இரண்டாம் தரம், 96.60 ரூபாய் மதல், 128.89 ரூபாய் வரை, 1,392 கிலோ கொப்பரை தேங்காய், 1.௮௪ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

