/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தெருநாய்களுக்கு அசைவ சாப்பாடு' போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து
/
'தெருநாய்களுக்கு அசைவ சாப்பாடு' போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து
'தெருநாய்களுக்கு அசைவ சாப்பாடு' போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து
'தெருநாய்களுக்கு அசைவ சாப்பாடு' போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து
ADDED : ஆக 20, 2024 02:33 AM
சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி ஒன்பதாவது வார்டு பார்க் ரோடு பகுதியில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. திடீரென மக்களை விரட்டுவதும், கடிக்கவும் பாய்வது சமீபமாக விரட்டி பதம் பார்க்கிறது. புது பார்க்ரோடு பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் ஒரு டாக்டர், இரக்கப்பட்டு தெருநாய்களுக்கு தினமும் கறி சோறு சமைத்து போட்டு வருகிறார். இதனால்தான் பார்க் ரோடு பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக, பார்க் ரோடு மக்கள் வெகுண்டனர்.
இந்நிலையில் வார்டு கவுன்சிலர் சுரோக ராஜ்குமார், தலைவர் ஸ்ரீதேவி அசோக்கை அழைத்துக் கொண்டு, சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று வந்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.
அவர்களிடம் விபரம் கேட்டறிந்த இன்ஸ்பெக்டர், உடனடியாக சம்மந்தபட்ட டாக்டர், மருத்துவமனை ஊழியர்களை அழைத்து விளக்கம் கேட்டார். இந்த பஞ்சாயத்து இரவு வரை நீடித்தது. 'சோறு போட்டது குத்தமா?' என டாக்டர், ஊழியர்களும், 'நாய் கடி வாங்கி பார்த்தா தெரியும்' என மக்களும் புலம்பித் தள்ளினர்.

