/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 14ல் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம்
/
வரும் 14ல் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம்
வரும் 14ல் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம்
வரும் 14ல் பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம்
ADDED : செப் 12, 2024 11:41 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பொது வினியோக திட்ட குறைதீர் நாள் முகாம் வரும், 14ல், அனைத்து தாலுகாவிலும் நடக்கிறது. புதிய ரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், மொபைல் போன் எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக தெரிவிக்-கலாம்.
ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு உட்பட்டவர்கள் வேப்பம்பா-ளையம் ரேஷன் கடையிலும், பெருந்துறை கே.கே.வலசு வட-முகம் வெள்ளோடு, மொடக்குறிச்சி வெள்ளியங்கிரிபுதுார் அறச்சலுார், கொடுமுடி கொந்தளம், கோபிக்கு நாதிபாளையம், நம்பியூர் கடத்துார், பவானி தொட்டி-பாளையம், அந்தியூர் பர்கூர்-2, சத்தி கெம்பநாயக்கன்பாளையம், தாளவாடி தொட்டபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் காலை, 10:00 மணிக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

