/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மதுபாட்டில்கள் கடத்திய ஸ்கூட்டி, கார் பறிமுதல்
/
மதுபாட்டில்கள் கடத்திய ஸ்கூட்டி, கார் பறிமுதல்
ADDED : ஆக 08, 2024 06:38 AM
ஈரோடு: மதுபாட்டில்கள் கடத்திய கார், டூவீலரை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபி மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் நடத்திய சோத-னையில் ஸ்கூட்டியில், 100 மதுபான பாட்டில்களை கடத்தியதாக கர்நாடகா மாநிலம், மைசூரை சேர்ந்த ராஜூ மகன் கோவிந்தராஜ், 32, என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதே போல் மாருதி எட்டிகா காரில், 69 கர்நாடகா மாநில மது-பாட்டில்களை கடத்தி வந்த தாளவாடி, பனஹள்ளி அனந்தம்பா-ளையம் சேகர் மகன் பரத்ராஜுவை, 31, என்பவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். மதுபான பாட்டில்கள், கார், டூவீலர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.