/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடை, வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு
/
கடை, வாடகை பிரச்னை தீர்க்க வழிகாட்டுதல் குழு
ADDED : ஆக 31, 2024 01:49 AM
ஈரோடு மாநகராட்சி, குடிநீர் வழங்கல்துறை அமைப்புகளுக்கு சொந்தமான, கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் நிலவும் வாடகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில், வழிகாட்டுதல் குழு
அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் விடுத்துள்ள சுற்றறிக்கை:இந்த வழிகாட்டு குழுவில், மாநகராட்சி செயற்பொறியாளர் (பணிகள்), உதவி ஆணையாளர் (வருவாய்), வருவாய் அலுவலர், உதவி வருவாய் அலுவலர் இடம் பெறுவர்.இக்குழுவினர் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்களுக்கான குத்தகை இனங்களுக்கு நியாய-மான வாடகை, இடத்துக்கேற்ற முன்வைப்புத் தொகை நிர்ணயம், வருவாய் ஈட்டும் சொத்துகளை ஏலம்
விடுவது குறித்த வழி-முறை வகுப்பது, குத்தகை, வாடகை மறு நிர்ணயம் செய்தலுக்கு கால இடைவெளி நிர்ணயிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்-கொள்வர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
பேப்பர் கப்பில் டீ வினியோகம்மாநகராட்சியில் பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் கேன்சர் பாதிப்பு அதிகரித்து வருவதாக, மாமன்ற கூட்டத்தில், பிரகாஷ் எம்.பி., நேற்று வருத்தம் தெரிவித்து பேசினார். அப்-போது, கவுன்சிலர்கள், அதிகாரிகள்,
நிருபர்களுக்கு, மாநகராட்சி சார்பில் ஆபத்தை விளைவிக்கும் பேப்பர் கப்பில் டீ வழங்கப்-பட்டது.இது போன்ற பேப்பர் கப்களில் சூடாக டீ, காபி குடிக்கும்-போது, அதிலுள்ள மெழுகு கரைந்து, கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, அல்சர், குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். இது கமிஷனரும், டாக்டருமான
மனிஷ், மாநகர நல அலுவலர் பிரகாஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரி-யாதா? என்று கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.