ADDED : ஆக 13, 2024 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மணக்கடவை சேர்ந்தவர் குப்புசாமி, 65; இவரின் மனைவி நாச்சாத்தாள்.
இருவரும் கடந்த, 2ம் தேதி பைக்கில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்தில் குப்புசாமி பலியான நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் நாச்சாத்தாள் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நேற்று இறந்தார்.

