/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா விற்றவர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
/
குட்கா விற்றவர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
ADDED : ஜூலை 24, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ராஜஸ்தான்
மாநிலத்தை சேர்ந்தவர் மோபா ராம், 27; ஈரோடு மாவட்டம் குன்னத்துாரில்
வசிக்கிறார்.
வரப்பாளையத்தில் டீக்-கடை நடத்தி வருகிறார். அரசால் தடை
செய்யப்பட்ட புகை-யிலை பொருட்களை விற்றதால், வரப்பாளையம் போலீசார் கைது
செய்து, மாவட்ட சிறையில் அடைத்தனர். தொடர்ந்து புகையிலை பொருள்
விற்பனையில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய,
எஸ்.பி., ஜவகர் மூலம் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர்
ராஜ-கோபால் சுன்கரா ஏற்றுக் கொள்ளவே, மோபா ராம் மீது குண்டர் சட்டம்
பாய்ந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட சிறையில் இருந்து, கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார்.