/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முப்பெரும் தெய்வங்களின் திருக்கல்யாண வைபவம்
/
முப்பெரும் தெய்வங்களின் திருக்கல்யாண வைபவம்
ADDED : செப் 02, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: குடும்பத்தில் ஐஸ்வரியம் கூடவும், தொழில் வளம் சிறப்படையவும், திருமணம் விரைவில் கைகூடவும் நாட்டில் விவசாயம் செழிக்கவும், ஈரோட்டில் முப்பெரும் தெய்வங்களின் திருக்கல்யாண வைபவ விழா, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்றிரவு நடந்தது.
மீனாட்சி, சீனிவாச பெருமாள், சுப்பிரமணியர் என முப்பெரும் தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. பல்வேறு திரவிய அபிஷேகங்களை தொடர்ந்து, சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சுயம்வரம் கலாபாரதி மங்களா சாசன திருமண
சங்கமத்தினர் செய்திருந்தனர்.